×

பொங்கல் பண்டிகையையொட்டி மண் அடுப்பு தயாரிக்கும் பணி மும்முரம்

பெரம்பலூர், டிச.29: பாளையம் கிராமத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண் அடுப்புகள் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக தொடங்கியுள்ளன. தமிழர்களின் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் தைமாதம் 1ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாகரீக மாற்றத்தில் ஈயம், பித்தளை, சில்வர் பாத்திரங்களில் படிப்படியாக மாறி தற்போது குக்கரில் பொங் கல் வைக்கும் நிலைக்கு நகர்ப்புற தமிழர்கள் வந்துவிட்டாலும், பல ஆயிரம் கிராம ப்புற மக்கள் மண்பானையில் பொங்கல் வைத்து கொண்டாடுவதையே வழ க்கமாக கொண்டுள்ளனர். இதற்காக மண் அடுப்புகளையே பயன்படுத்துகின்றனர்.

வயல்களில் வீடுள்ளவர்கள், வயல்களில் பொங்கல் வைப்பவர்களுக்காகவே மண் அடுப்புகள் பயன்பாடு குறையாமல் உள்ளது. பெரம்பலூர் அருகே உள்ள பாளையம் கிராமத்தில் குயவர் இனத்தவர் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினராக வசித்து வருகின்றனர். இங்குள்ள நூற்றுக்கும் மேற்ப ட்ட இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் சென்றுவிட்டனர். 20க்கும் மேற்பட்டோர் மேஸ்திரி, கொத்தனார், பெயிண்டர் என கட்டுமானத் தொழிலுக்கு மாறிவிட்டாலும், பரம்பரைத் தொழிலை இன்றளவும் சிலர் தொடர்ந்து செய் துவருகின்றனர். குறிப்பாக முருகேசன், குப்பம்மாள்,பிச்சை, பெரியசாமி, கிருஷ்ணன், சேகர் , சந்தானலட்சுமி உ ள்ளிட்டோர் மண்பானைகள், அகல் விளக்குகள், மண் அடுப்புகள் தயாரித்து விற்கும் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

களரம்பட்டி ஏரிமண், மனை மண், வைக்கோல் தரிசுகளைக் குழைத்து மண் அடுப்பு தயாரிக்கும் பணிகள் தற்போது விறு விறுப்பாக நடந்து வருகிறது. காயவைத்து சூளையில் வைத்து எரித்து சுட்டபிறகு விற்பனைக்கு கொண்டு வரப்படும் மண்அடுப்புகள் ஒற்றை அடுப்பு ரூ.100க்கும், இரட்டை அடுப்பு ரூ.150க்கும் வாரச் சந்தைகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. பாளையம், குரும்பலூர், ரெங்கநாதபுரம், தம்பிரான்பட்டி கிராம பொதுமக்கள் சூளைக்கே வந்து அடுப்புகளை வாங்கிச் செல்லுகின்றனர். பொங்கலையொட்டி மண்பானைகள் தயாரிக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன.

Tags : festival ,Pongal ,
× RELATED வேளாண்மை இணை இயக்குநர் ஆலோசனை...