×

முன்னாள் தலைமை செயலாளர் கிரிஜா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: காமராஜர் சாலையில் உள்ள டிஜிபி அலுவலகத்திற்கு நேற்று அதிகாலை வர்கிஸ் என்ற பெயரில் வந்த மின்னஞ்சலில் ‘முன்னாள் தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வீட்டில் இன்னும் சற்று நேரத்தில் வெடி குண்டு வெடிக்கும்’ என கூறப்பட்டிருந்தது. ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள கிரிஜா வைத்தியநான் வீட்டில் வெடிகுண்டு நிபுணர் முத்துசாமி மற்றும் சஞ்சீவ் தலைமையில் சோதனை நடத்தியதில் புரளி என தெரியவந்தது.

Tags : Chief Secretary ,Girija ,Chennai ,Varghese ,DGP ,Kamaraj Salai ,Tamil Nadu ,Girija Vaidyanathan ,Raja Annamalaipuram… ,
× RELATED கரூர் சாலைபகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களால் பொதுமக்களிடம் அச்சம்