×

தந்தையுடன் சென்றபோது விபரீதம் பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்து 10 வயது சிறுமி பரிதாப சாவு

*திருச்சி அருகே சோகம்

சமயபுரம் : மண்ணச்சநல்லூர் அருகே தில்லாம்பட்டி கிராமத்தில் உள்ள தெற்கு தெரு பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (35). கார் டிரைவர். இவரது மனைவி சரண்யா. இவர்களுக்கு கிரேசிக்கா(10) என்ற மகளும், ராம் என்ற மகனும் உள்ளனர்.இந்நிலையில் கடந்த 12ம் தேதி ராஜ்குமார் செகனட்டில் பேசஞ்சர் ஆட்டோவை வாங்கினார். அன்றிரவு ஆட்டோவுடன் வீட்டிற்கு வந்த ராஜ்குமார் தனது குழந்தைகளை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு ரவுண்டு அடித்தார்.

அப்போது கனமழை பெய்ந்ததால் ஆட்டோ தில்லாம்பட்டி பகுதியில் உள்ள வெள்ளகுளம் அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதையடுத்து ராஜ்குமார் அபய குரல் எழுப்பியதில் அவ்வழியே வந்த நபர்கள் மூவரையும் மீட்டனர்.இதில் சிறுமி கிரேசிக்கா ஆட்டோவின் அடியில் சிக்கிக்கொண்டார். ராஜ்குமார் ஆட்டோவில் உள்ள கம்பி இடுக்கில் கை மாற்றிக்கொண்டு எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதில் அதிர்ஷ்டவசமாக ராஜ்குமார், மகன் ராம் எவ்வித காயமும் இன்றி உயிர் தப்பினர். மேலும் மயங்கி கிடந்த கிரேசிக்காவை மீட்டு மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனையிக்கு கொண்டு சென்றனர். அப்போது பரிசோதனை செய்த மருத்துவர் சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் சிறுமி கிரேசிக்காவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.புதிய ஆட்டோவில் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு ரவுண்டு அடித்தப்போது ஏற்பட்ட விபத்தில் சிறுமி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : SOKAM SAMAYAPURAM NEAR TRICHI ,RAJKUMAR ,SOUTH STREET AREA ,DILLAMBATTY VILLAGE NEAR MANNACHANALLUR ,Sarah ,Grecika ,Ram ,
× RELATED இந்தியாவின் முக்கிய நகரங்களில் சர்வே;...