- கூகிள்
- விசாகப்பட்டினம்
- புது தில்லி
- பாரத் AI சக்தி நிகழ்வு
- தில்லி
- இந்தியா
- விசாகப்பட்டினம், ஆந்திரப் பிரதேசம்
- ஆந்திரப் பிரதேசம்
- முதல் அமைச்சர்
- சந்திரபாபு நாயுடு
புதுடெல்லி: கூகுள் நிறுவனம் சார்பில் பாரத் ஏஐ சக்தி நிகழ்ச்சி டெல்லியில் நேற்று நடத்தப்பட்டது. அதில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இந்தியாவின் மிகப்பெரிய ஏஐ மையத்தை அமைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு முன்னிலையில், அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.1.3 லட்சம் கோடி முதலீடு செய்வதற்கான ஒப்பந்தத்தில் கூகுள் நிறுவனமும், ஆந்திர அரசும் கையெழுத்திட்டன. இங்கு 1 ஜிகாவாட் திறன் கொண்ட மிகப்பெரிய தரவு மையத்தை அதானி குழுமத்துடன் இணைந்து கூகுள் அமைக்க உள்ளது.
