×

போக்ஸோ சட்டத்தில் விசைத்தறி அதிபர் கைது

திருச்செங்கோடு, டிச.28: திருச்செங்கோடு அருகே குமரமங்கலம் குடித்தெருவைச் சேர்ந்தவர்  இளையராஜா(40). விசைத்தறி அதிபரான இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவருக்கும், முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறில், செந்தில்குமாரின் மனைவி சித்ரா(37) என்பவரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால், மன உளைச்சலுக்குள்ளான அவர் திருச்செங்கோடு புறநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில், போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிந்து விசாரித்த போலீசார், இளையராஜைவை  கைது செய்தனர். பின்னர், திருச்செங்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் சவும்யா விசாரித்து 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்குமாறு உத்தரவிட்டார். இதையடுத்து, திருச்செங்கோடு கிளை சிறையில் இளையராஜா அடைக்கப்பட்டார்.

Tags :
× RELATED ஊரக கண்டுபிடிப்பாளர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்