×

அரூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை

அரூர், அக்:14: அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு, விளையாட்டு சீருடை மற்றும் மாணவர் போலீஸ் படை மாணவர்களுக்கு சீருடையை, சிவராம் சில்க்ஸ் உரிமையாளர் ராமன் வழங்கினார். இந்நிகழ்ச்சி தலைமையாசிரியர் ஆறுமுகம் தலைமையில் நடந்தது. நல்லாசிரியர் பழனிதுரை, முருகேசன், உதவி தலைமை ஆசிரியர்கள் இளங்கோ, சக்திவேல், கதிரேசன், மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்கள் மாவட்ட அளவில் வெற்றி பெற வாழ்த்தினர். ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர், கால்பந்து மாணவர்களுக்கும், வளைகோல் பந்து வீரர்களுக்கும், போலீஸ் மாணவர் படை மாணவர்களுக்கும் சீருடை வழங்கப்பட்டது.

Tags : Arur Government School ,Arur ,Sivaram Silks ,Raman ,Arur Government Boys Higher Secondary School ,Student Police Force ,Headmaster ,Arumugam ,Palanidurai ,Murugesan ,Headmaster… ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...