×

திருஆவினன்குடி கோயிலில் சனிப்பெயர்ச்சிஇணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு

பழநி/வேடசந்தூர், டிச.28: பழநி திருஆவினன்குடி கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா சிறப்பு யாகத்துடன் நடந்தது. சனீஸ்வர பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு அதிகாலை 5.22 மணிக்கு இடம்பெயரும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதனையொட்டி பழநி திருஆவினன்குடி கோயிலில் அமைந்துள்ள சனீஸ்வரர் சன்னதியில் சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடந்தன. அதிகாலை 4.15 மணிக்கு மார்கழி மாத திருப்பள்ளி எழுச்சி பூஜை நடந்தது. 4.20 மணிக்கு விநாயகர் பூஜை நடந்தது.

தொடர்ந்து புண்யஹவாசனம், கலச பூஜை, அக்னி கார்யம் ஹோமம் நடந்தது. அதிகாலை 4.30 மணிக்கு சனீஸ்வருக்கு 16 வகை அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து பூர்ணாகுதி, கலசாபிஷேகம், சிறப்பு அலங்கார நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து 5.22 மணிக்கு சனிப்பெயர்ச்சி நேரத்தில் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது. கோயில் தலைமை அர்ச்சக ஸ்தானீகர் அமிர்தலிங்கம் மற்றும் செல்வசுப்பிரமணியம் தலைமையிலான சிவாச்சாரியார்கள் பூஜைகளை மேற்கொண்டனர். கொரோனா விதிமுறை காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

எனினும், யுடியூப் மற்றும் கோயில் இணையதளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.  நிகழ்ச்சியில் பழநி கோயில் செயல் அலுவலர் கிராந்திகுமார் பாடி, துணை ஆணையர் செந்தில்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல்:
தாடிக்கொம்பு அருகே உள்ள அகர முத்தாலம்மன் ஆலயத்தில் சனி பெயர்ச்சி நேற்று நடைபெற்றது. அதிகாலை 5.22 மணிக்கு கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், சனிபகவான் பிரத்தியேக ஹோமம் செய்யப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர்கள் மாரிமுத்து, மேகநாதன் ஆகியோர் செய்திருந்தனர்.

வேடசந்தூர்:
வேடசந்தூர் அருகே உள்ள சுக்காம்பட்டி வாஸ்தீஸ்வரர் ஆலயத்தில் சனி பெயர்ச்சி நேற்று நடைபெற்றது. சனீஸ்வர பகவானுக்கு 13 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிவனடியார்கள் துரை ஆதித்தனார், கோயில் கமிட்டி நிர்வாகிகள் ­­தர், முருகானந்தம், தளியுகபதி, அகரம் முன்னாள் பேரூராட்சி தலைவர் சக்திவேல் மற்றும் பக்தர்கள், கோயில் நிர்வாகிகள், கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Thiruavinankudi Temple ,
× RELATED பழநி திருஆவினன்குடி கோயிலில் காலணி பாதுகாப்பு மையம் அமைக்க கோரிக்கை