×

நாகை: வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம் மீனவர்கள் 21 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

 

நாகை: வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம் மீனவர்கள் 21 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். புஷ்பவனம் கிராமத்தில் இருந்து 5 படகுகளில் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென படகில் வந்த 3 இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 5 படகுகளில் இருந்த 21 மீனவர்களை தாக்கி மீன்பிடி வலைகள், ஜிபிஎஸ் கருவி, செல்போன்கள் பறிப்பு என புகார் தெரிவித்துள்ளனர்.

 

Tags : Nagai ,Pushpavanam ,Vedaranyam ,Kodiyakarai ,
× RELATED வரலாற்றில் புதிய உச்சமாக முட்டை விலை 625...