×

நூற்றாண்டு காணும் லட்சுமி காந்தன் பாரதி! அனைவருக்கும் எடுத்துக்காட்டான காந்திய வாழ்வு: முதலமைச்சர் எக்ஸ் தளத்தில் பதிவு

சென்னை: நானிலமும் போற்றும் நற்பண்புகளைக் கொண்ட லட்சுமி காந்தன் பாரதி வாழ்க்கையை, இன்றைய தலைமுறை தனக்கான பாடமாகக் கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர் பதிவிட்டுள்ளதாவது; “நூற்றாண்டு காணும் லட்சுமி காந்தன் பாரதி! அனைவருக்கும் எடுத்துக்காட்டான காந்திய வாழ்வு!

விடுதலைப் போராட்ட வீரர் – மொழிப்போர்த் தீரர் நாவலர் சோமசுந்தர பாரதியார் பெயரன், விடுதலைப் போராட்டத் தியாகிகள் கிருஷ்ணசாமி பாரதி, லட்சுமி பாரதி ஆகியோரின் மகன் என நாட்டுக்காக உழைத்த குடும்பத்தின் வழித்தோன்றலாகப் பிறந்து, 16 வயது மாணவராக விடுதலைப் போராட்டத்தில் தொடங்கி, மதுரை மாவட்ட ஆட்சியர், தலைவர் கலைஞரின் முதல் தனிச் செயலாளர் எனப் பரந்த பெருவாழ்வுக்குச் சொந்தக்காரரான அவரை வாழ்த்தி மகிழ்கிறேன்!

நாட்டுப்பற்றில் உறுதி, மக்கள் தொண்டில் நாட்டம், எளிமை என நானிலமும் போற்றும் நற்பண்புகளைக் கொண்ட லட்சுமி காந்தன் பாரதி அவர்களது வாழ்க்கையை, இன்றைய தலைமுறை தனக்கான பாடமாகக் கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Tags : Lakshmi Kanthan Bharathi ,Chennai ,Chief Minister ,M.K. Stalin ,
× RELATED கட்சி விரோத செயல்பாடுகள் ஜி.கே.மணிக்கு...