×

யுபிஐ மூலம் பள்ளி கட்டணம்

புதுடெல்லி: வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தவும் பெற்றோரின் வசதியை அதிகரிக்கவும் யுபிஐயைப் பயன்படுத்தி பள்ளிகளில் கட்டண வசூல் செயல்முறைகளை நவீனமயமாக்குமாறு ஒன்றிய கல்வி அமைச்சகம் அனைத்து மாநிலங்களையும் கேட்டுக்கொண்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில் யுபிஐ, மொபைல் வாலட்கள் மற்றும் நெட் பேங்கிங் போன்ற டிஜிட்டல் கட்டண தளங்களை பயன்படுத்த அறிவுறுத்தி உள்ளது.

அயோத்தி தீபத் திருவிழாவில் 28 லட்சம் தீபம்; அயோத்தி: உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியில் இந்த ஆண்டு தீபத்திருவிழாவின்போது சரயு நதிக்கரையில் சுமார் 28லட்சம் தீபங்கள் ஏற்றப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மெக்சிகோ வெள்ளத்தில் 28 பேர் பலி; மெக்சிகோ சிட்டி: வடஅமெரிக்காவில் உள்ள மெக்சிகோ நாட்டை ஒட்டியுள்ள பசிபிக் பெருங்கடலில் ரேமன்ட் எனப்பெயரிடப்பட்ட புயலால் கனமழை பெய்து வருகிறது. இதில் 28 பேர் பலியாகி விட்டனர்.

Tags : UPI ,New Delhi ,Union Education Ministry ,
× RELATED பறக்கும் விமானத்தில் மயங்கி விழுந்த...