×

எடப்பாடி தோல் பேக்டரியா நடத்துறாரு?: நெட்டிசன்கள் கிண்டல்

ஈரோடு: அதிமுக பொதுச்செயலாளர்எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம், மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட அவல்பூந்துறையில் பிரசாரம் மேற்கொண்டார். இதனையொட்டி, எடப்பாடி பழனிசாமியை வரவேற்கும் வகையில், தவெக சார்பில் பேனர் வைக்கப்பட்டுள்ளது. அந்த பேனரில், எங்களுடைய கஷ்டமான காலங்களில் எங்களுக்கு தோல் (தோள்) கொடுத்த எடப்பாடியாருக்கு நன்றி என்றும், நாங்கள் என்றும் உங்களுக்கு கடமை பட்டுள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ளது.

அதாவது, தோள் என்பதற்கு பதிலாக, தோல் என எழுத்துப்பிழையுடன் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தற்போது சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கிண்டலடித்து பதிவிட்டு வருகின்றனர். அதாவது, எடப்பாடியார் ‘தோல்’ கொடுத்தாராம்… அவரென்ன தோல் பேக்டரியா நடத்துறாரு? என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். மேலும், தவெக தற்குறிகள் முதலில் எழுத்துப்பிழை இல்லாமல் எழுதவும், படிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் நெட்டிசன்கள் பதிவிட்டுள்ளனர்.

Tags : Edappadi ,AIADMK ,General Secretary ,Edappadi Palaniswami ,Avalpoonthurai ,Modakkurichi ,Tevag ,
× RELATED அடையாறு – மாமல்லபுரம் இடையே டபுள்...