×

பட்டுக்கோட்டை 31வது வார்டு அதிமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து நீக்கம்

பட்டுக்கோட்டை, அக். 12: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது: அதிமுகவின் கொள்கை கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டு, கட்டுப்பாட்டை மீறி, களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தால், தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்தை சேர்ந்த, பட்டுக்கோட்டை நகர 31வது வார்டு அதிமுக செயாளர், கவுன்சிலர் ஆர்.கே.குமணன் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுகிறார். அதிமுகவினர் யாரும் இவருடன் தொடர்பு வைத்துக்கொள்ள கூடாது. இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags : Pattukottai 31st ,Ward ,AIADMK ,Councilor ,Pattukottai ,General Secretary ,Edappadi Palaniswami ,City ,Thanjavur South District ,
× RELATED ஆத்தூர் போலீசில் காதல் ஜோடி தஞ்சம்