×

தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு:சென்னை வானிலை மையம் தகவல்!!

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

11.10.2025: தமிழ்நாட்டில் இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. ஈரோடு, சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, தென்காசி, நெல்லை, மயிலாடுதுறை, நாகையில் இன்று கனமழை பெய்யக்கூடும்.

12.10.2025: தமிழ்நாட்டில் நாளை 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, திருச்சி, நாமக்கல், சேலம், தென்காசி, நெல்லை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

13.10.2025: கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

14.10.2025 – 15.10.2025: தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தூத்துக்குடி, இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

11.10.2025 முதல் 13.10.2025 வரை: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை வரை அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னையில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்:
11.10.2025 முதல் 15.10.2025 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை.

வங்கக்கடல் பகுதிகள்:
11.10.2025 முதல் 15.10.2025 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை.

அரபிக்கடல் பகுதிகள்:
11.10.2025: மத்தியமேற்கு அரபிக்கடலின் சில பகுதிகள், கேரளா- கர்நாடகா கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு – தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், லட்சதீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

12.10.2025: கேரளா – கர்நாடகா கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு – தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், லட்சதீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

13.10.2025 முதல் 15.10.2025 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை. மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Tags : Tamil Nadu ,Chennai Weather Centre ,Chennai ,Chennai Meteorological Centre ,Thanjay ,Thiruvarur ,Pudukkottai ,Nilgiri ,
× RELATED ரோடு ஷோ, அரசியல் கூட்டங்களுக்கு...