×

பிரதான உந்து குழாய் மாற்றி அமைக்கும் பணி புரசைவாக்கம் கழிவு நீரிறைக்கும் நிலையம் 2 நாள் செயல்படாது; குடிநீர் வாரியம் தகவல்

 

சென்னை: சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி சார்பில் கணேசபுரம் வியாசர்பாடி ஜீவா ரயில் நிலைய சுரங்கப்பாதை மேம்பால கட்டுமான பணிகளுக்காக, டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலையில் உள்ள 1050 மி.மீ விட்டமுடைய கழிவுநீர் பிரதான உந்து குழாய் மாற்றி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் வரும் 14ம்தேதி பிற்பகல் 2 மணி முதல் 15ம் தேதி இரவு 8 மணி வரை (30 மணி நேரம்) மண்டலம்-6க்கு உட்பட்ட புரசைவாக்கம் கழிவு நீரிறைக்கும் நிலையம் தற்காலிகமாக செயல்படாது.

எனவே, ராயபுரம், திரு.வி.க நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை மண்டலங்களுக்குட்பட்ட இடங்களில் கழிவுநீர் தொடர்பான புகார்களுக்கு பகுதி அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். இதற்காக, மண்டலம்-5க்கு உட்பட்டவர்கள் (ராயபுரம்) 8144930905, 8144930255 என்ற எண்களிலும், மண்டலம்-6க்கு உட்பட்டவர்கள் (திரு.வி.க நகர்) 8144930906, 8144930216, 8144930217 என்ற எண்களிலும், மண்டலம்-8க்கு உட்பட்டவர்கள் (அண்ணா நகர்) 8144930908, 8144930258 என்ற எண்களிலும், மண்டலம்-9க்கு உட்பட்டவர்கள் (தேனாம்பேட்டை) 8144930909, 8144930111 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Tags : Purasaivakkam ,Water Supply Board ,Chennai ,Chennai Water Supply Board ,Ganeshapuram Vyasarpadi Jeeva ,Railway Station Tunnel Overpass ,Chennai Corporation ,Dr. Ambedkar College Road ,
× RELATED மகளிர் உரிமை தொகை திட்டம்;...