×

கோயில் சொத்துகளை தனிநபர் பெயருக்கு பட்டா மாற்ற இடைக்கால தடை: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: கோயில் சொத்துகளை தனிநபர் பெயருக்கு பட்டா மாற்ற கொண்டுவரப்பட்ட சட்டத்துக்கு இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தனிநபர் பெயருக்கு பட்டா மாற்றும் வகையில் கொண்டுவரப்பட்ட சட்டதிருத்தத்தை ரத்து செய்ய கோரி திருத்தொண்டர் சபை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் ஐகோர்ட் மதுரை கிளை மனு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு விசாரணையில், சட்டதிருத்தம் செய்து உயர்மட்ட குழு அமைத்த அரசு உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மனு குறித்து தலைமைச் செயலர், வருவாய்த்துறை செயலர், பத்திரப்பதிவுத் துறை செயலர் பதில் தரவும், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யவும் ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

Tags : High ,Madurai ,High Court ,Thirutonda Sabha ,Radhakrishnan ,Court ,
× RELATED கரூர் சாலைபகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களால் பொதுமக்களிடம் அச்சம்