×

உயர் நீதிமன்றம்தான் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்தது: கரூர் கூட்ட நெரிசலில் SIT விசாரணையில் அரசு தரப்பு வாதம்: விசாரணையை ஒத்திவைத்தார் நீதிபதி

 

டெல்லி: கரூர் கூட்ட நெரிசலில் SIT விசாரணைக்கு எதிரான மனுக்கள், சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தொடங்கியது. நீதிபதிகள் ஜே.கே. மஹேஸ்வரி, என்.வி. அஞ்சாரியா அமர்வு மனுக்களை விசாரித்தனர். விஜய் மீதான சென்னை உயர் நீதிமன்ற கருத்துகளுக்கு எதிராக த.வெ.க. தரப்பு வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம் வாதம் செய்தார்.

எங்கள் தரப்பில் விளக்கமே கேட்காமல், உயர் நீதிமன்றத்தின் கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. கரூரில் இருந்து போலீசாரின் கட்டாயத்தால் விஜய் வெளியேறினார். பரப்புரை பேருந்தின் அருகே நிறைய வாகனங்கள் வந்தபோது, ஒரு வாகனத்தில் மோதியுள்ளது. என்று த.வெ.க. தரப்பு வாதாடியுள்ளது.

கரூர் சம்பவத்தில் விசாரணை நடத்தப்படுவதை நாங்கள் எதிர்க்கவில்லை. உச்ச நீதிமன்றமே சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடக்கட்டும். முன்னாள் நீதிபதி விசாரணையை மேற்பார்வையிடட்டும். தமிழ்நாடு காவல்துறையின் சிறப்பு விசாரணைக்குழுவை நாங்கள் ஏற்கவில்லை

வழிகாட்டு நெறிமுறைகள் கோரிய வழக்கில் மதுரை அமர்வு, எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. சென்னை அமர்வு இதனை விசாரிப்பதை மேற்கோள் காட்டி, அங்கு முறையீடு செய்ய அறிவுறுத்தியது. ஒரே வழக்கில் எப்படி இரு உத்தரவுகள்?” என்ற உச்ச நீதிமன்ற நீதிபதி கேள்விக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி பதில் அளித்துள்ளார்.

“உயர் நீதிமன்றம்தான் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. குழுவில் உள்ள அதிகாரிகளை சந்தேகப்பட எந்தக் காரணமும் இல்லை. அஸ்ரா கர்க், சிபிஐயிலும் பணியாற்றியுள்ளார் என்று தமிழ்நாடு அரசு சார்பில் வாதம் செய்தது. அறிவித்த நேரத்துக்கு விஜய் வராததே ஒட்டுமொத்த பிரச்சனைக்கும் காரணம். விஜய் பகலில் வருவதாக கூறியதால் காலை 7 மணி முதலே பொதுமக்கள் காத்திருந்தனர்.

கரூர் நெரிசல் வழக்கில் விஜய் இன்று வரை சேர்க்கப்படாத நிலையில் ஆறுதல் கூற அவர் செல்லவில்லை என்று அரசு தரப்பு வாதம் செய்துள்ளது. வாதங்களை விசாரித்த நீதிபதி விசாரணையை ஒத்திவைத்தார். உணவு இடைவேளைக்காக விசாரணை ஒத்திவைத்துள்ளார். பிற்பகல் 2 மணிக்கு விசாரணை தொடங்கும் என்று அறிவித்துள்ளனர்.

Tags : Court ,Special Investigative Committee ,SIT ,Karur Crowd Crowd ,Delhi ,Karur ,CBI ,Supreme Court ,J. K. Maheshwari ,N. V. Anjaria ,Chennai ,High on ,Vijay ,
× RELATED அமெரிக்காவின் வரிவிதிப்பால் தமிழக...