×

கயத்தாறு, கோவில்பட்டியில் ரூ.1.78 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கிவைத்தார்

கயத்தாறு டிச,27:கயத்தாறு, ேகாவில்பட்டி பகுதியில் ரூ.1.78 கோடி திட்டப்பணிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார். கயத்தாறு பேரூராட்சி பகுதியில் பராமரிப்பு நிதி 2020-2021 திட்டத்தின் கீழ் ரூ.60 லட்சத்தில் பேவர்பிளாக் சாலை அமைக்கவும், மூலதன மானிய நிதி 2020-2021 திட்டத்தின் கீழ் ரூ.40 லட்சத்தில் புதிய ஆழ்துளைகிணறு அமைத்தல், குடிநீர் பைப்லைன் விஸ்தரிப்பு போன்ற திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. அமைச்சர் கடம்பூர் ராஜூ அடிக்கல் நாட்டி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். பிஆர்ஓ சீனிவாசன் அனைவரையும் வரவேற்று பேசினார். நெல்லை மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குனர் குற்றாலிங்கம் தலைமை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட பேரூராட்சிகள் உதவி செயற்பொறியாளர் வாசுதேவன், கோவில்பட்டி ஆர்டிஓ விஜயா, கயத்தாறு தாசில்தார் பாஸ்கரன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் வினோபாஜி, மாவட்ட ஜெ.பேரவை செயலாளர் செல்வகுமார், பொருளாளர் வேலுமணி, முன்னாள் கவுன்சிலர் பாலமுருகன், நகர செயலாளர் கப்பல் ராமசாமி, மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ், விவசாயப் பிரிவு மாவட்ட இணைச் செயலாளர் மாரியப்பன், பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் முருகேசன், மாணவரணி ஒன்றிய செயலாளர் நவநீதகிருஷ்ணன், மாவட்ட துணை செயலாளர் கண்ணன், எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் தங்கபாண்டியன், மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் சுடலை, இலக்கிய அணி பாலகணேசன், தகவல் தொழில்நுட்ப பிரிவு பிரபாகரன், வேல்முருகன் மற்றும் பலர் பங்கேற்றனர். பேரூராட்சி செயல் அலுவலர் ஜோதிபாசு நன்றி கூறினார்.

கோவில்பட்டி: கோவில்பட்டி இனாம்மணியாச்சி ஊராட்சிக்குட்பட்ட லட்சுமி மில் காலனி, விநாயகர்நகர், ஆலம்பட்டி கிராமங்களுக்கு ஜே.ஜே.எம். திட்டத்தின் கீழ் ரூ.46 லட்சத்தில் குடிநீர் இணைப்பு, கிருஷ்ணாநகரில் ரூ.32 லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்ட அமைச்சர் கடம்பூர் ராஜூ அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, அறங்காவலர் குழுத்தலைவர் மோகன், உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட பஞ்.தலைவர் சத்யா, மாவட்ட கவுன்சிலர்கள் சந்திரசேகரன், தங்கமாரியம்மாள், யூனியன் சேர்மன் கஸ்தூரி, துணைசேர்மன் பழனிசாமி, நகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் அய்யாத்துரைபாண்டியன், அன்புராஜ், இளைஞர்  பாசறை மாவட்ட செயலாளர் கணேஷ்பாண்டியன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராமர், முன்னாள் யூனியன் துணைசேர்மன் சுப்புராஜ், சவுந்தரராஜன், ஆவின் பால் நுகர்வோர் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், பஞ்.தலைவர் ஜெயலட்சுமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இனாம்மணியாச்சியில் உயர்கோபுர மின்விளக்ைக அமைச்சர் தொடங்கி வைத்தார்.

Tags : Kadambur Raju ,Kovilpatti ,Kayatharu ,
× RELATED தேசிய சிலம்ப போட்டி கோவில்பட்டி பள்ளி மாணவன் சாதனை