- ஜம்மு மற்றும் காஷ்மீர்
- மத்திய அமைச்சர்
- அமித் ஷா
- புது தில்லி
- மத்திய உள்துறை அமைச்சர்
- லெப்டினன்ட்
- கவர்னர்
- மனோஜ் சின்ஹா
- யூனியன் வீட்டுச் செயலாளர்
- கோவிந்த் மோகன்
புதுடெல்லி: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தன் எக்ஸ் பதிவில், “ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு நிலவரம் குறித்து துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, ஒன்றிய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினோம். பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை சீர்குலைக்க பனிப்பொழிவை பயன்படுத்தி தீவிரவாதிகள் ஊடுருவக்கூடும். பிராந்திய அச்சுறுத்தலுக்குஎந்தவொரு முயற்சியையும் முறியடிக்க பாதுகாப்பு படையினருக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் தீவிரவாதம் இல்லாத ஜம்மு காஷ்மீர் என்ற பார்வையை விரைவுப்படுத்த எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு தேவை” என தெரிவித்துள்ளார்.
