- சிவகங்கை
- சிவகங்கை
- நேரு பஜார்
- Duweiler
- மருத்துவ கல்லூரி மருத்துவமனை
- சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி ஹாஸ்ப
சிவகங்கை, அக்.9:சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நேரு பஜாரை சேர்ந்த ஒருவர் டூவீலர் விபத்தில் காயமடைந்து மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை அளிக்க தாமதமான நிலையில், ஆத்திரமடைந்த நோயாளியின் உறவினர்கள் பயிற்சி மருத்துவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கத்தின் சார்பில் சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து, ஒருவரை கைது செய்தனர். இதனை கண்டித்து கடந்த 5ம் தேதி வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. வருவாய் துறை, காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இரண்டு நாட்களில் மற்றவர்களையும் கைது செய்வதாக தெரிவித்தனர். இதனால் போராட்டம் கைவிடப்பட்டது.இந்நிலையில் போலீசார் கூறியபடி யாரையும் கைது செய்யாததால், நேற்று பயிற்சி மருத்துவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நோயாளிகள் கடும் அவதியடைந்தனர்.
