சென்னை: தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் காலியாக உள்ள மின்குறை தீர்ப்பாளர் பதவிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் காலியாக உள்ள மின்குறை தீர்ப்பாளர் பதவிக்கான அறிவிப்பு கடந்த செப்டம்பர் 22ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த பதவிகளுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாளாக அக்டோபர் 10ம் தேதி (நாளை) வரை அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் விண்ணப்பதாரர்களுக்கு கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. எனவே, ஆர்வமுள்ள மற்றும் தகுதியுள்ள நபர்கள் தங்கள் விண்ணப்பங்களை செயலாளர், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், 4வது தளம், சிட்கோ கார்பரேட் அலுவலக கட்டிடம், திரு.வி.க. தொழில்துறை எஸ்டேட், கிண்டி, சென்னை- 600 032 என்ற முகவரிக்கு வரும் 27ம் தேதிக்குள் அனுப்புமாறும், மேலும் விவரங்கள் அறிய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் www.tnerc.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
