×

திருவாரூர் ரயில்வே பாலத்தில் செடி, கொடிகளால் ஆபத்து

திருவாரூர், டிச.27: திருவாரூர் ரயில்வே மேம்பாலத்தில் இருந்துவரும் ஆலமரம் செடிகளை உடனே அகற்ற வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூரிலிருந்து நாகை மற்றும் திருத்துறைப்பூண்டி பகுதிகளுக்கு பேருந்துகள் மற்றும் வாகனங்கள் சென்று வருவதற்கு போக்குவரத்து நெருக்கடி இருந்த நிலையில் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன் பைபாஸ் சாலை அமைக்கப்பட்டது. இதற்காக இந்த பைபாஸ் சாலையில் ரயில்வே மேம்பாலம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த மேம்பாலத்தின் அடியில் ஆலமரம் உட்பட பல்வேறு செடி கொடிகள் முளைத்து வருவதால் இந்த பாலத்திற்கு சேதம் ஏற்படும் நிலை இருந்து வருகிறது. இவ்வாறு இந்த பாலமானது சேதம் ஏற்பட்டு போக்குவரத்து தடைபடும் பட்சத்தில் திருவாரூரிலிருந்து நாகை மற்றும் திருத்துறைப்பூண்டி பகுதிகளுக்கு செல்வதற்கு போக்குவரத்து முற்றிலும் தடைபடும். எனவே ரயில்வே நிர்வாகம் உரிய கவனம் செலுத்தி இந்த பாலத்தின் அடியில் முளைத்துவரும் ஆலமரம் உள்ளிட்ட அனைத்து செடி கொடிகளையும் அகற்றி பாதுகாத்திட வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : plant ,railway bridge ,Thiruvarur ,
× RELATED மதுரை மாவட்டம் கள்ளிக்குடி உர ஆலையை...