×

பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக கடைகள்

பெரம்பலூர், டிச.27: பாலக்கரை பகுதியில் சாலையோரத்தில் காய்கறி கடைகள் விற்பனை செய்யப்படுவதால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதுடன் விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
பெரம்பலூர் நகரில் தினசரி மார்க்கெட் மற்றும் உழவர் சந்தை, சந்தை ஆகியவை செயல்பட்டு வருகிறது. கொரோனா காலத்தில் தினசரி மார்க்கெட் உழவர் சந்தை சந்தை ஆகியவைகள் மூடப்பட்டது அப்போது தற்காலிகமாக பல்வேறு இடங்களில் காய்கறி விற்பனை நடைபெற்றது. அப்போது பாலக்கரை பகுதியிலும் காய்கறி விற்பனை நடைபெற்றது. அதனை அடுத்து தற்போது கொரோனா பரவல் முடிவடைந்த நிலையில் தினசரி மார்க்கெட் உழவர் சந்தை வாரசந்தை ஆகியவை வழக்கம்போல் செயல்பட துவங்கியது.

ஆனாலும் தற்போது பாலக்கரை பகுதியில் சாலை ஓரங்களில் காய்கறி விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் பகுதியில் காலை மாலை நேரங்களில் போக்குவரத்து வாகன நெரிசல் ஏற்படும் போது போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதுடன், மிகவும் நெரிசலான நேரங்களில் விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே இதுபோன்ற சாலையோரங்களில் காய்கறிகள் விற்பனை செய்யும் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மார்க்கெட் சந்தை போன்ற பகுதிகளில் காய்கறி விற்பனை செய்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதை தவிர்ப்பதுடன் விபத்து ஏற்படுவதை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : Shops ,area ,Perambalur Palakkad ,
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி