கலெக்டர் தகவல் ஆண்டிமடத்தில் வேளாண் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

ஜெயங்கொண்டம், டிச.27: ஆண்டிமடம் வட்டாரத்தில் அட்மா திட்டத்தின்கீழ் வேளாண்மைத் துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் தொழில் நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கிராமியக் கலைக்குழுவினர் மூலம் ஆண்டிமடம் மற்றும் மணக்கொல்லை கிராமங்களில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் வேளாண்மை உதவி இயக்குநர் ராஜலட்சுமி வேளாண்மைத் திட்டங்கள் குறித்தும் பயிர் காப்பீட்டின் அவசியம் குறித்தும் கூறினார். மேலும் மணக்கொல்லை கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கவரப்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் சேரநாதன் முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினார். வேளாண்மைத் துறையில் செயல்படுத்தப்படும் முக்கிய திட்டங்களான தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம், தேசிய உணவு பாதுகாப்பு திட்டம், பயிர் காப்பீட்டுத் திட்டம், நுண்ணீர் பாசனத் திட்டம், மானாவாரி நில மேம்பாட்டுத் திட்டம் குறித்து கரகாட்டம், ஒயிலாட்டம் முதலிய கலை நிகழ்ச்சிகள் மூலம் விவசாயிகளுக்கு விளக்கினர். மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு பிரதம மந்திரி பயிர்காப்பீட்டுத திட்டம் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் அட்மா திட்ட அலுவலர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Related Stories: