×

நோயாளிகள்❌ மருத்துவ பயனாளிகள்✔: இனிமேல் இப்படித்தான் கூப்பிடணும்… அரசு உத்தரவு

சென்னை: ‘நோயாளிகள்’ என அழைப்பதற்கு பதில் இனி ‘மருத்துவ பயனாளிகள்’ என்று அழைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவம் – மக்கள் நல்வாழ்வு துறை முதன்மை செயலாளர் செந்தில்குமார் நேற்று வெளியிட்டுள்ள அரசு உத்தரவில் கூறியிருப்பதாவது: முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, மருத்துவர்களையும், மருத்துவமனைகளையும் நாடி வருகின்றவர்களை ‘நோயாளிகள்’ என அழைப்பதற்கு பதிலாக இனி வருங்காலங்களில் ‘மருத்துவ பயனாளிகள் / மருத்துவ பயனாளர்கள்’ எனும் சொல்லை பயன்படுத்த வேண்டும் என அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Chennai ,Principal Secretary of ,Medical and ,Public Welfare Department ,Senthilkumar ,Chief Minister ,
× RELATED வரலாற்றில் புதிய உச்சமாக முட்டை விலை 625...