×

வங்கக் கடலில் காற்று சுழற்சி 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. அத்துடன் தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு வாரத்துக்கு அனேக இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதால் 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் அனேக இடங்களில்நேற்று மழை பெய்துள்ளது. அத்துடன் ஒருசில இடங்களில் வெப்பநிலை இயல்பைவிட 2-3 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகரித்தும் சில இடங்களில் இயல்பை ஒட்டியும் இருந்தது.

இந்நிலையில், அரபிக் கடலில் நிலை கொண்டு இருந்த சக்தி புயல் வலுக்குறைந்து நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது. இது மேலும் இன்று வலுவிழக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தென்மேற்கு வங்கக் கடலில் தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. அத்துடன் தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலை கொண்டுள்ளது. அதன் காரணமாக தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை நேற்று பெய்துள்ளது.

அதன் தொடர்ச்சியாக இன்றும், கோவை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், நீலகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். 9ம் தேதி கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர், மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யும். இதேநிலை 12ம் தேதி வரை நீடிக்கும் என்பதால் 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இன்று முதல் 11ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பைஒட்டியும், இயல்பில் இ ருந்து சற்று குறைந்தும் இருக்கும். சென்னையில் இ ன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது.

Tags : Bay of Bengal Orange ,Chennai ,southwest Bay of Bengal ,Tamil Nadu ,South Indian ,
× RELATED கரூர் சாலைபகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களால் பொதுமக்களிடம் அச்சம்