×

மழைநீர் இணைப்பு கால்வாயை நள்ளிரவு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!!

சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் (6.10.2025)அன்று இரவு சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வி.பி.ராமன் சாலையில், வருகின்ற பருவமழை காலங்களில் மழைநீர் தேங்காத வகையில், எளிதாக பக்கிங்காம் கால்வாய்க்கு செல்லும் வகையில் மழைநீர் வடிகால் கால்வாயில் தூர்வாரப்பட்டு உள்ளதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து வி.பி.ராமன் சாலை. ராயப்பேட்டை நெடுஞ்சாலை மற்றும் மாசிலாமணி சாலைகள் சந்திப்பு பகுதியில், ராயப்பேட்டை நெடுஞ்சாலை மற்றும் மாசிலாமணி சாலைகளில் புதிதாக கட்டப்பட்டு உள்ள மழைநீர் கால்வாய்களை இணைக்கும் வகையில் கட்டப்பட்டு வரும் இணைப்பு கால்வாய் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மழைநீர் வடிகால் இணைப்பு கால்வாய் பணிகளை விரைந்து முடிக்குமாறு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள், அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

புதிதாக கட்டப்பட்டு வரும் மழைநீர் கால்வாய்கள் மூலமாக புதிதாக கட்டப்பட்டு வரும் மழைநீர் கால்வாய்கள் வி.பி.ராமன் சாலை பகுதியில் மழைநீர் எளிதாக பக்கிங்காம் கால்வாய்க்கு சென்று அங்கிருந்து கடலுக்கு சென்று விடும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த ஆய்வில் பெருநகர சென்னை மாநகராட்சி நிலைக்குழுத் தலைவர் (பணிகள்) திரு. நே.சிற்றரசு, மாமன்ற உறுப்பினர் திருமதி கமலா செழியன், சென்னை பெருநகர மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Deputy Chief Minister ,Udhayanidhi Stalin ,Chennai ,Tamil Nadu ,V.P. Raman Road ,Chepauk-Thiruvallikeni ,Buckingham Canal ,
× RELATED அடையாறு – மாமல்லபுரம் இடையே டபுள்...