- புதுச்சேரி
- முதல் அமைச்சர்
- ரங்கசாமி
- ஆந்திரப் பிரதேசம்
- சந்திரபாபு நாயுடு
- காரைக்கால்
- கலைமணி
- கீழகாசகுடி…
புதுச்சேரி: ஆந்திரப் பிரதேச மீனவர்கள் பறிமுதல் செய்து வைத்துள்ள காரைக்கால் மீனவர்களின் படகுகளை மீட்டுத் தர வலியுறுத்தி ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கடிதம் அனுப்பியுள்ளார்.
முதலமைச்சர் ரங்கசாமி அனுப்பிய கடிதத்தில்; “கீழகாசகுடியைச் சேர்ந்த கலைமணி ச/ஓ முனுசாமி மற்றும் கீழகாசகுடியைச் சேர்ந்த முத்துதமிழ்செல்வன் ச/ஓ வீரசாமி ஆகியோருக்குச் சொந்தமான IND-PY-PK-MM-1763 ஆகிய பதிவு எண்களைக் கொண்ட இரண்டு மீன்பிடி படகுகள் உள்ளூர் மீனவர்களால் பறிமுதல் செய்யப்பட்டு, முறையே 31.07.2025 மற்றும் 20.09.2025 ஆகிய தேதிகளில் நெல்லூர் மாவட்டம் ஜூவ்வலதின்னே மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீரசாமி ஆகியோருக்குச் சொந்தமான IND-PY-PK-MM-1469 மற்றும் IND-PY-PK-MM-1772 ஆகிய பதிவு எண்களைக் கொண்ட மேலும் இரண்டு படகுகள், உள்ளூர் மீனவர்களால் பறிமுதல் செய்யப்பட்டு, நெல்லூர் மாவட்டம் ஜூவ்வலதின்னே மீன்பிடி துறைமுகத்தில் முறையே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலதண்டாயுதம், சுப்பிரமணியன், கிளிஞ்சல்மேடு, காரைக்கால் பகுதி, புதுச்சேரி யூ.டி., நெல்லூர் மாவட்ட மீனவர்களால் கைது செய்யப்பட்டு, 05.10.2025 அன்று 03.30 மணிக்கு ஜூவ்வலதின் மீன்பிடி துறைமுகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அவர்கள், முன்னுரிமை அடிப்படையில் அதிகாரிகளுடன் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
