×

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன் எழுதிய நூலை முதல்வர் வெளியிட்டார்

 

சென்னை: பள்ளிக்கல்வித் துறை சார்பில் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக அறக்கட்டளையின் அறங்காவலர் ஆர்.பாலகிருஷ்ணன் எழுதிய ‘சப்யாதா கி யாத்ரா: சிந்து சே வைகை’ (ஒரு பண்பாட்டின் பயணம்: சிந்து முதல் வைகை வரை) இந்தி மொழிபெயர்ப்பு நூலினை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட, தலைமைச் செயலாளர் முருகானந்தம் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகமும் இந்தி மொழியின் முன்னணி பதிப்பாளரான வாணி பிரகாஷனும் இணைந்து இந்த நூலை வெளியிட்டுள்ளார்கள்.

சிந்து சமவெளி நாகரிகம் விட்ட இடமே தமிழின் சங்கம் தொட்ட இடம் என்பதை இந்த நூலில் ஆர்.பாலகிருஷ்ணன் சான்றுகளுடன் நிறுவியிருக்கிறார். இதன்மூலம், 60 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்தி மொழியின் முன்னணிப் பதிப்பு நிறுவனமான வாணி பிரகாஷன் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்துடன் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நூலை சுரபி கத்யால், ஜோதி லாவண்யா இந்தியில் மொழிபெயர்ப்பு செய்துள்ளனர்.

 

Tags : Chief Minister ,IAS ,R. Balakrishnan ,Chennai ,Roja Muthiah Research Library Trust ,School Education Department ,
× RELATED மகளிர் உரிமை தொகை திட்டம்;...