×

தமிழ்நாட்டில் மழை நீடிக்கும் 12 மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட்

 

சென்னை: மேற்கு திசையில் இ ருந்து வீசும் காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களின் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. 8ம் தேதி கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருத்தப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை,திருவண்ணாமலை மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்பதால் இன்றும் அந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேநிலை 9மற்றும் 10ம் தேதியும் நீடிக்கும். சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசானது முதல் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும். மேலும், மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதியில் மணிக்கு 60 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

 

Tags : Tamil Nadu ,Chennai ,Coimbatore district ,Nilgiris ,Theni ,Dindigul ,Erode ,
× RELATED கரூர் சாலைபகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களால் பொதுமக்களிடம் அச்சம்