×

ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு கண்ணமங்கலத்தில் சித்த மருத்துவ கட்டிடம் திறப்பு

கண்ணமங்கலம், அக். 7: கண்ணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று காலை திடீர் ஆய்வு செய்தார். திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு சித்த மருத்துவ பிரிவு கட்டிடம் ரூ.15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. இதை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி மூலம் திறந்து வைத்தார். முன்னதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று காலை திடீரென ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்தார். அப்போது மருத்துவர்களின் வருகை பதிவேடு, நோயாளிகளின் சிகிச்சை பதிவேடு ஆகியவற்றை ஆய்வு ெசய்தார். மேலும் பதிவேடுகளில் உள்ள செல்போன் எண்களை தொடர்பு கொண்டு, சிகிச்சை பெற்ற நபர்களிடம் சிகிச்சை எவ்வாறு அளிக்கப்பட்டது என்பது குறித்து கேட்டறிந்தார்.

மேலும் பிரசவ அறை, ரத்த பரிசோதனை அறை, காத்திருப்பு அறை ஆகியவற்றை ஆய்வு செய்தார். அப்போது அங்கு சிகிச்சை பெற வந்தர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து புதிதாக கட்டப்பட்டுள்ள சித்த மருத்துவ பிரிவு கட்டிடத்தையும் ஆய்வு செய்தார். வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ்பிரகாஷ், சுகாதார ஆய்வாளர் ராஜேஷ்குமார், கண்ணமங்கலம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் திருமால், கண்ணமங்கலம் நகர செயலாளர் கோவர்த்தனன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags : Minister ,Siddha ,Kannamangalam ,M. Subramanian ,health center ,Kannamangalam, Tiruvannamalai district ,
× RELATED செய்யாறு பஸ் ஸ்டாண்டில் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய வாலிபர் கைது