×

ஆண்டிபட்டி அருகே நூற்பாலையில் தீ: பஞ்சு நாசம்

ஆண்டிபட்டி, டிச.26: ஆண்டிபட்டி அருகே உள்ள நூற்பாலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள கழிவு பஞ்சுகள் எரிந்து நாசமானது. ஆண்டிபட்டி அருகே உள்ள க.விலக்கில் அண்ணா கூட்டுறவு நூற்பாலை இயங்கி வருகிறது. இந்த நூற்பாலையில் நிரந்தர பணியாளர்கள், தற்காலிக பணியாளர்கள் என 250க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். 3 ஷிப்டு அடிப்படையில் இந்த நூற்பாலை இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று காலை 6.30 மணிக்கு நூற்பாலையின் தரைத்தளத்தில் வைக்கப்பட்டிருந்த கழிவு பஞ்சுகளில் திடீரென தீப்பற்றியது. தீயை அணைக்கும் முயற்சியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இது குறித்து ஆண்டிபட்டி தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

Tags : spinning mill ,Andipatti ,
× RELATED ஆண்டிபட்டியில் ஆச்சர்யம் வெள்ள காக்கா பறக்குது பாரு…