×

அகில இந்திய தொழிற்தேர்வில் கலந்துகொள்ள தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

சென்னை : அகில இந்திய தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாக கலந்துகொள்ள தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என சென்னை மாவட்ட ஆட்சி தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: 2026ம் ஆண்டு ஜூலை மாதத்தில் கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் டிஜிடி (DGT)ல் நடத்தப்படும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாக கலந்துகொள்ள தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து தேர்வு கட்டணம் (ரூ.200/- ரூபாய் இருநூறு மட்டும்) செலுத்தி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள மாவட்ட அரசினர் தொழிற் பயிற்சி நிலைய (Nodal Govt. ITI) முதல்வரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு முதனிலை தேர்வுகள் கருத்தியல் தேர்வு அடுத்த மாதம் 4ம் தேதி அன்றும் மற்றும் செய்முறை தேர்வு 5ம் தேதி ஆகிய தேதிகளில் கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்தப்படும். இதற்கான முழு வழிகாட்டுதல்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணைய தளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம். தனித்தேர்வராக விண்ணப்பிக்க வரும் 8ம் தேதி கடைசி நாள். அதற்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags : All ,Examination ,Chennai ,Chennai District ,Rashmi Siddharth Jagade ,
× RELATED வரலாற்றில் புதிய உச்சமாக முட்டை விலை 625...