×

ராமநாதபுரம் மாவட்டத்துக்கு 9 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

ராமநாதபுரம் மாவட்டத்துக்கு 9 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். “ரூ.30 கோடியில் ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலை 6 வழிச்சாலையாக மாற்றப்படும். திருவாடானை, ஆர்.எஸ். மங்கலம் பகுதியில் முக்கிய கண்மாய்கள் ரூ.18 கோடியில் மேம்படுத்தப்படும். கடலாடி வட்டத்தில் உள்ள கண்மாய் ரூ.2.6 கோடியில் சிக்கல் கண்மாய் ரூ.2.3 கோடியில் மறுசீரமைப்பு. பரமக்குடியில் ரூ.4.5 கோடியில் புதிய அலுவலக கட்டடம் கட்டப்படும். ராமநாதபுரம் பழைய பேருந்து நிலையம் நவீன வணிக வளாகமாக மாற்றப்படும். ராமநாதபுரம் அரசு மகளிர் கல்லூரியில் ரூ.10 கோடி செலவில் புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்டப்படும். கீழக்கரை நகராட்சிக்கு ரூ.3 கோடியில் புதிய அலுவலகக் கட்டடம் கட்டப்படும். கமுதியில் விவசாயிகள் நலன் கருதி ரூ.1 கோடியில் 100 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதனக் கிடங்கு அமைக்கப்படும் உள்ளிட்ட 9 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

Tags : Chief Minister ,MLA ,Ramanathapuram District ,K. Stalin ,Stalin ,Ramanathapuram National Highway 6 ,Thiruvadanai, R. S. ,Mangalam ,
× RELATED மகளிர் உரிமை தொகை திட்டம்;...