×

சனிப்பெயர்ச்சி விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்

காரைக்கால்,டிச.25: திருநள்ளாறில் நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழாவில் பங்கேற்கும் பக்தர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை எடுத்து இருக்க வேண்டும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திருநள்ளாறில் வருகிற 27ம் தேதி நடைபெற உள்ள சனிப்பெயர்ச்சி விழாவில் பங்கேற்கும் பக்தர்கள் ஆன்லைனில் பதிவு செய்து இருக்க வேண்டும். மேலும் கொரோனா பரிசோதனை செய்து அதற்கான சான்றிதழ் உடன் வருபவர்கள் மட்டுமே கோயிலுக்கு அனுமதிக்கப்படுவார்கள். மேலும் 10 வழிமுறைகள் அடிப்படையில் சனிப்பெயர்ச்சி நடைபெறும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக திருநள்ளாறு கோயில் பரம்பரை ஸ்தானிகர் எஸ்.பி.எஸ்.நாதன் தெரிவித்தார். இந்நிலையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கூறியதாவது, சென்னை உயர் நீதிமன்றம் கொடுத்துள்ள அறிவுறுத்தலின்படி மனுதாரர் உடன் அரசு அதிகாரிகள் ஆலோசனை நடத்தியது. அதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. இதில் அனைவரும் கையெழுத்திட்டனர். திருவிழா நன்றாக நடைபெற வேண்டும். அதே நேரத்தில் மக்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியம். காரைக்காலில் வசிக்கும் மக்கள் வருகின்ற பக்தர்கள் அனைவரும் பாதுகாப்புடன் சாமி தரிசனம் செய்ய போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளளது என்றார்.

Tags : examination ,Corona ,ceremony ,devotees ,Saturnalia ,
× RELATED கியூட், நெட் தேர்வுகளுக்கான மதிப்பெண்களை சமப்படுத்தும் முறை நீக்கம்