- Papparapatti
- எடப்பாடி
- முதல் அமைச்சர்
- எடப்பாடி பழனிசாமி
- பென்னாகரம் தாலுகா
- சட்டமன்ற உறுப்பினர்
- கே.பி. அன்பழகன்
பாப்பாரப்பட்டி, அக்.1: பென்னாகரம் வட்டம், பாப்பாரப்பட்டியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகையை முன்னிட்டு, பொதுமக்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் குடிநீர் வசதி, மருத்துவ வசதி, போக்குவரத்து வசதிகள் சரியாக இருக்கின்றனவா என்பதை கே.பி.அன்பழகன் எம்எல்ஏ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, விவசாய பிரிவு தலைவர் டி.ஆர்.அன்பழகன், ஒன்றிய செயலாளர் வேலுமணி, நகர செயலாளர் முனுசாமி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் குட்டி மற்றும் அதிமுக உறுப்பினர்கள் இளங்கோ, கார்த்திகேயன், மணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.
