×

அரியலூரில் மக்கள் குறைதீர் கூட்டம் 311 மனுக்கள் குவிந்தன

அரியலூர், செப். 30: அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி, தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 311 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து மாவட்ட கலெக்டர் மூலம் பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் மாவ ட்ட வருவாய் அலுவலர் மல்லிகா, மாவட்ட நிலை அலுவலர்கள் மற்றும் அனைத்துதுறை அரசு அலு வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Ariyalur ,Public Grievance Redressal Day Meeting ,Public Grievance Redressal Day ,Ariyalur District Collectorate ,District Collector Rathinasamy ,
× RELATED மார்கழி பிறப்பு, பொங்கல் பண்டிகை...