×

நிறுவனங்கள் தொழிலாளர் நல நிதியை ஜனவரி 31க்குள் செலுத்தலாம்

ஊட்டி, டிச. 25: நீலகிரி மாவட்டத்தில் உள்ள நிறுவனங்கள் தொழிலாளர் நல நிதியை இணையதளம் வாயிலாக வரும் ஜனவரி 31ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். குன்னூர் தொழிலாளர் உதவி ஆணையர் சதீஸ்குமார் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு தொழிலாளர் நல நிதிச் சட்டம் 1972ன் படி தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம் அமைக்கப்பட்டு தொழிலாளர்களுக்கென பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தொழிலாளர் நல நிதிச் சட்டம் 1972 பிரிவு 2(டி)ன்படி தொழிற்சாலைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், மலைத்தோட்ட நிறுவனங்கள், ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரியும் கடைகள் மற்றும் உணவு நிறுவனங்களில் பணிபுரியும் ஒவ்வொரு தொழிலாளிக்கும், தொழிலாளியின் பங்காக ரூ.10ம், ஒவ்வொரு தொழிலாளிக்கு வேலையளிப்பவர் பங்காக ரூ.20ம் சேர்த்து மொத்தம் ரூ.30 வீதம் தொழிலாளர் நல நிதி பங்குத்தொகையாக நிர்வாகம் செலுத்த வேண்டும்.

அதன்படி 2020ம் ஆண்டிற்கான தொழிலாளர் நல நிதியை 31.01.2021க்குள் வாரியத்திற்கு செலுத்த வேண்டும். அனைத்து நிறுவனங்களும் தொழிலாளர் நல நிதி செலுத்த வேண்டும். நிறுவனங்கள் தொழிலாளர்கள் நல நிதியினை இணையவழியில் செலுத்துவதற்கு வசதியாக www.lwb.tn.gov.in என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. 2020ம் ஆண்டிற்கான தொழிலாளர் நல நிதித் தொகையினை இந்த இணையதளம் வழியாகவும் செலுத்தலாம். மேலும் வங்கி வரைவோலையாகவோ வரும் ஜனவரி 31ம் தேதிக்கு முன்பாக செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், டிஎம்எஸ்., வளாகம், தேனாம்ேபட்டை, சென்னை 600006 என்ற முகவரிக்கு அனுப்பி வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Companies ,
× RELATED 127 ஆண்டுகளுக்குப் பிறகு கோத்ரேஜ் குழுமம் இரண்டாகப் பிரிந்தது