×

ஐஏஎஸ் அதிகாரிகள் 3 பேர் இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: ஐஏஎஸ் அதிகாரிகள் 3 பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக தலைமை செயலாளர் முருகானந்தம் நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது: பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டு ஆணையரகத்தின் ஆணையர் ஆ.அண்ணாதுரை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குநராகவும்,தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குநராக இருந்த அ.ஜான் லூயிஸ் பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டு ஆணையரகத்தின் ஆணையராகவும், உயர் கல்வி துறை இணை செயலாளராக இருந்த க.கற்பகம் பெருநகர சென்னை மாநகராட்சி இணை ஆணையராக (கல்வி) நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : IAS ,Tamil ,Nadu ,government ,Chennai ,Tamil Nadu government ,Tamil Nadu ,Chief Secretary ,Muruganandam ,Commissioner ,Milk Production ,Dairy Development Commission ,A. Annadurai ,Nadu… ,
× RELATED கரூர் சாலைபகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களால் பொதுமக்களிடம் அச்சம்