- அரசு பெண்கள் பள்ளி NSS முகாம்
- பெரியகோவிலங்குளம்
- சங்கரன்கோவில்
- என்.எஸ்.எஸ்
- சங்கரன்கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி
- கவிதா
- வெய்ஸ்லின் லில்லி
- பஞ்சாயத்து
- தலைவர்…
சங்கரன்கோவில்,செப்.30: சங்கரன்கோவில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி சார்பில் பெரியகோவிலாங்குளம் கிராமத்தில் என்எஸ்எஸ் திட்ட சிறப்பு முகாம் நடந்தது. திட்ட அலுவலர் கவிதா, திட்ட முகாம் அலுவலர் வைஸ்லின் லில்லி முன்னிலையில் நடந்த இம்முகாமில் தூய்மைப் பணிகளை பெரிய கோவிலாங்குளம் பஞ். தலைவர் பிச்சை பாண்டியன் துவக்கிவைத்தார். இதில் ஆர்வத்துடன் பங்கேற்ற 30க்கும் மேற்பட்ட மாணவிகள், பொது சுகாதாரத்தின் அவசியத்தை மக்களிடம் எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
