×

உருமாறிய புதிய கொரோனா வைரஸ்: 10 ஆயிரம் பி.சி.ஆர். கருவிகள் தயார்

ஈரோடு,டிச.25: உருமாறிய புதிய கொரோனாவை சமாளிக்க 10 ஆயிரம் பி.சி.ஆர்.  கருவிகள் உள்பட மருத்துவ உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளதாக  சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்து நாட்டில் உருமாற்றத்துடன் புதிய கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய  கொரோனா முன்பு இருந்ததை விட கூடுதல் வீரியம் மற்றும் பரவும் வேகம் அதிகமாக  இருப்பதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இங்கிலாந்து,  அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து ஈரோடு மாவட்டத்திற்கு கடந்த 10  நாட்களில் 16 பேர் வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர்களின்  முகவரிக்கு சென்று சுகாதாரத்துறையினர் பி.சி.ஆர்., டெஸ்ட் செய்து வருவதோடு,  14 நாட்களுக்கு வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தி உள்ளனர்.  இதனிடையே உருமாறிய புதிய கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளை மாவட்ட சுகாதாரத்துறை தீவிரப்படுத்தி உள்ளது.

கொரோனா பரிசோதனை  மேற்கொள்ள ஏதுவாக, பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு  10,000 பி.சி.ஆர்., கருவிகள், 3,000 வி.டி.எம்., மற்றும் டபிள் ஸ்வாப்  கருவிகள் தயார் நிலையில் உள்ளதாக, சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் சுகாதாரத்துறை இணை இயக்குநர் அலுவலகத்தில் 15,000 வி.டி.எம்.,  மற்றும் டபிள் ஸ்வாப் கருவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள விரும்பினால், அரசு மருத்துவமனையில்  இலவசமாக பரிசோதனை மேற்கொள்ளலாம் என்று சுகாதாரத்துறையினர்  கேட்டுக்கொண்டுள்ளனர்.

Tags : PCR ,
× RELATED கொடுமுடி அருகே வன்கொடுமை சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்: கடையடைப்பு