- அண்ணா
- திருவண்ணாமலை
- கலெக்டர்
- தர்பகராஜ்
- அறிஞர் அண்ணா மராத்தான்
- அரிக்னார் அண்ணா
- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்…
*கலெக்டர் தொடங்கி வைத்தார்
திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டியை கலெக்டர் தர்ப்பகராஜ் தொடங்கி வைத்தார். அதில், மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
திருவண்ணாமலையில் அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மாரத்தான் ஓட்டப்போட்டி நேற்று நடந்தது.
இப்போட்டியில் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.
மேலும், 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு கிரிவலப்பாதையில் உள்ள சீனுவாச பள்ளி கோசாலை முதல் மாவட்ட விளையாட்டு அரங்கம் வரை மாரத்தான் ஓட்டம் நடந்தது.
அதேபோல், 17 வயது முதல் 25 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு கிரிவலப்பாதையில் அபய மண்டபம் முதல் மாவட்ட விளையாட்டு அரங்கம் வரையிலும், 25 வயதிற்கு மேற்பட்ட மற்றும் 17 வயது முதல் 25 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு திருவண்ணாமலை பஸ் நிலையம் (அவலூர்பேட்டை சாலை சந்திப்பு) முதல் மாவட்ட விளையாட்டு அரங்கம் வரை நடந்தது.இந்நிலையில், மாரத்தான் போட்டியை கலெக்டர் தர்ப்பகராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அப்போது, மாவட்ட விளையாட்டு அலுவலர் சண்முகபிரியா உள்ளிட்டோர் உடனிருந்தனர். போட்டியில், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டுச் சான்றுகள் வழங்கப்பட்டது.
அதன்படி, முதல் பரிசு ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.3 ஆயிரம் மற்றும் மூன்றாம் பரிசு ரூ.2 ஆயிரம் மற்றும் தகுதிச் சான்றுகள் வழங்கப்பட்டது. மேலும், 4 முதல் 10 இடங்களை பெறுபவர்களுக்கு பரிசு தொகையாக தலா ரூ.1,000 மற்றும் தகுதிச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
