×

மருத்துவம் சார்ந்த சான்றிதழ் பாடப்பிரிவுகளில் நேரடி மாணவர் சேர்க்கைக்கு 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தகவல்

சென்னை: கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவம் சார்ந்த சான்றிதழ் பாடப்பிரிவுகளில் நேரடி மாணவர் சேர்க்கை மூலம் பயில விண்ணப்பிக்க 30ம் தேதி கடைசி நாள் என மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிட்ட அறிவிப்பு : சென்னை, கிண்டி, கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் 2025-26 கல்வியாண்டிற்கான மருத்துவம் சார்ந்த சான்றிதழ் படிப்புகளுக்கு மொத்தமாக 143 காலியிடங்கள் உள்ளன.

அதன் விவரங்களை இணையதளத்தில் https://www.kcssh.org மற்றும் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை அறிவிப்பு பலகையில் காணலாம். கார்டியோ சோனோகிராபி டெக்னீசியன்(1 ஆண்டு) (பெண்)-17, ஈசிஜி/ட்ரெட்மில் டெக்னீசியன்(1 ஆண்டு) – 20, பம்ப் டெக்னீசியன்(1 ஆண்டு)- 9, கார்டியாக் கேத்தடரைசேஷன் ஆய்வக நுட்புனர் (1 வருடம்)(ஆண்) -20, அவசர சிகிச்சை நுட்புநர் (1 வருடம்) – 20, டயாலிசிஸ் டெக்னீசியன் (1 வருடம்) –

11மயக்கவியல் நுட்புனர் (1 வருடம்)-20, அறுவை அரங்கு நுட்புனர் (1 வருடம்) 19 உள்ளிட்ட 143 காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 31.12.2025 அன்று விண்ணப்பதார்ர் 17 வயதை நிறைவு செய்திருக்க வேண்டும். தெரிவு, தேர்வு குழுவால் பரிந்துரைக்கப்பட்வராக, பத்தாம் வகுப்பு, மேல்நிலைப் பள்ளி படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சேர்க்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கான 5 சதவீதம் இட ஒதுக்கீடு உள்ள தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீட்டு நடைமுறை பின்பற்றப்படும்.

மேலும் நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறும் நாள் 22.09.2025 லிருந்து முழு மாணவர் சேர்க்கை செயல்முறை நிறைவு பெறும் நாள் 30.9.2025. வகுப்புகள் 6.10.2025ம் தேதி முதல் தொடங்கும். சென்னை, கிண்டி, கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை கூட்ட அரங்கு நடைபெறும் கலந்தாய்வு கூட்டத்திற்கு தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்கப்பட வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044-22500118 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் kcsshguindy@gmail.com என்ற மின்னஞல் மூலம் சம்ர்பபிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Collector ,Rashmi Siddharth Jagade ,Chennai ,District Collector ,Kalaignar Centenary High Specialty Hospital ,
× RELATED தமிழ்நாட்டில் ஒரே ஆண்டில் 5,000க்கு...