×

நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பில் அரசு கல்லூரியில் காசநோய் விழிப்புணர்வு

அறந்தாங்கி, செப். 27: ஆவுடையார்கோயில் அருகே உள்ள பெருநாவலூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பில், தேசிய காசநோய் ஒழிப்புத்திட்டத்தின் ஒருபகுதியாக ‘வளமான பெண்கள் நலமான தமிழகம்’ எனும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழச்சிக்கு, கல்லூரி முதல்வர் துரை தலைமை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்களாக மணமேல்குடி காசநோய் ஒழிப்புத்திட்ட முதுநிலை அறுவை சிகிச்சை மருத்துவர் பொன்.மாணிக்கம், அறந்தாங்கி சுகாதார மேற்பார்வையாளர் கற்பகாதேவி ஆகியோர் பங்கேற்று, காசநோய் குறித்த விழிப்புணர்வையும், காசநோயாளிகளின் நண்பனாக மாறும் இணைய வழிப்பயியிற்சியையும் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவியருக்கு வழங்கினர். நிகழ்ச்சியை, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் முனைவர் ரமேஷ், பழனித்துரை ஆகியோர் ஒருங்கிணைத்திருந்தனர்.

 

Tags : Aranthangi ,Government Arts and Science College ,Perunavalur ,Avudaiyarkoil ,
× RELATED ஆத்தூர் போலீசில் காதல் ஜோடி தஞ்சம்