×

அரியலூர் நகராட்சி வார்டுகளில் வரும் 30ம் தேதி உங்களுடன் ஸ்டாலின் முகாம்

அரியலூர்,செப்.27: அரியலூர் நகராட்சி வார்டுகளில் வரும் 30ம் ேததி உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும். அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட 6,10 மற்றும் 12 ஆகிய வார்டுகளை வரும் 30ம் ேததி ஒருங்கிணைத்து அரியலூர் நகராட்சி அலுவலகத்திலும், செந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நாகல்குழி, பிலாக்குறிச்சி, வீராக்கன் மற்றும் கீழமாளிகை ஆகிய ஊராட்சிகளை ஒருங்கிணைத்து நாகல்குழி சமுதாயக் கூடத்திலும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் நடைபெற உள்ளது.

இம்முகாம்கள் குறித்த விபரங்களை பொதுமக்களுக்கு முறையாக தெரிவிப்பதற்காக, தன்னார்வலர்கள் 19.09.2025 அன்று முதல் வீடுவீடாகச் சென்று விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கி முகாம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். எனவே, மேற்கண்ட பகுதிகளில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 

Tags : Stalin ,Ariyalur Municipality ,Ariyalur ,Sendurai Panchayat Union ,
× RELATED 9 சட்டமன்ற தொகுதியிலும் 20, 21ம் தேதிகளில்...