- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- புவியியல் மற்றும் சுரங்கத் துறை
- கிண்டி தொழில்துறை எஸ்டேட்
- சென்னை
- கிண்டி தொழில்துறை எஸ்டேட் வளாகம்
- சென்னை…
சென்னை: கிண்டி தொழிற்பேட்டை வளாகத்தில் ரூ.23 கோடியில் கட்டப்பட்டுள்ள புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் தலைமை அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் தலைமை அலுவலகமானது சென்னை, கிண்டி தொழிற்பேட்டை வளாகத்தில் தொடங்கப்பட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக பழமையான கட்டிடத்தில் இயங்கி வருகிறது.
இதையடுத்து பணியாளர்கள் மற்றும் நிர்வாக நலனை கருத்தில் கொண்டு, அதே இடத்தில் 40,528 சதுர அடி கட்டிட பரப்பளவில் தரை மற்றும் நான்கு தளங்களுடன் ரூ.23.10 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் தலைமை அலுவலக கட்டிடத்தை சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்தபடி காணொலிக்காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி, இயற்கை வளங்கள் துறை கூடுதல் தலைமை செயலாளர் (பொறுப்பு) சுன்சோங்கம் ஜடக் சிரு, புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர் மோகன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
