ஐ.நா. சபை: ஐ.நா. பொதுச் சபையின் 80வது அமர்வின் பொது விவாதத்தில் பாக்.பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் இந்தியா கடந்த மே மாதம் 4 நாட்கள் எங்கள் மீது தாக்குதல் நடத்திய போது 7 இந்திய ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தினோம். காஷ்மீர் விவகாரத்தில் உரையாடல் மற்றும் ராஜதந்திரம் மூலம் சர்ச்சைகளை அமைதியான முறையில் தீர்ப்பதில் பாகிஸ்தான் நம்பிக்கை கொண்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அனுசரணையில் ஒரு பாரபட்சமற்ற பொது வாக்கெடுப்பு மூலம் காஷ்மீர் அதன் அடிப்படை சுயநிர்ணய உரிமையைப் பெறும். அமெரிக்க அதிபர் டிரம்ப் அமைதியின் தூதர். அமைதிக்கான முயற்சிகள் தெற்காசியாவில் ஒரு மிகப்பெரிய போரைத் தவிர்க்க உதவியது. உலகின் நமது பகுதியில் அமைதியை வளர்ப்பதற்கு அதிபர் டிரம்பின் அற்புதமான மற்றும் சிறந்த பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக, பாகிஸ்தான் அவரை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைத்தது. பாகிஸ்தான் அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாத கண்டிக்கிறது. இவ்வாறு பேசினார்.
