×

திருப்பூரில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஆய்வு கூட்டம்

திருப்பூர், செப். 26: தமிழகத்தில் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை காலமாக இருந்து வருகிறது. அக்டோபர் மாதம் தொடங்கவுள்ள நிலையில் திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பான ஆய்வுக்கூட்டம், மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

மாநகராட்சி ஆணையாளர் அமித் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கும் இடங்கள், நொய்யலாற்றில் வெள்ளம் ஏற்படாத வகையில் நடவடிக்கை, கழிவுநீர் கால்வாய்களை தூய்மைப்படுத்துவது உள்ளிட்ட மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. இதில், மாநகராட்சி துணை ஆணையாளர் சுந்தர்ராஜன், தலைமை பொறியாளர் முகமது சபியுல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

Tags : Tirupur ,Tamil Nadu ,Tirupur Corporation ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...