- கள்ளக்குறிச்சி
- செல்வம்
- கிரி
- மூங்கில்பாடி
- சின்னா சேலம்
- கல்லாக்கிரிச்சி மாவட்டம்
- உதவி ஆய்வாளர்
- மணிகண்டன்
கள்ளக்குறிச்சி, செப். 25: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகில் உள்ள மூங்கில்பாடி கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் மகன் கிரி(17). இவரது வீட்டு பகுதியில் கஞ்சா செடி வளர்த்து வருவதாக கிடைத்த தகவலின்பேரில் சின்னசேலம் உதவி ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது கிரி வீட்டின் பின்புறம் 4 கஞ்சா செடி வளர்த்து வந்தது தெரிந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து கிரியை கைது செய்தனர்.
