×

காஞ்சிபுரத்தில் நாளை நடைபெறும் மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்க அழைப்பு

காஞ்சிபுரம், செப்.26: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர், பொதுமக்களிடையே உடற்தகுதி கலாச்சாரத்தை புகுத்தும் வண்ணம் அண்ணா மாரத்தான் ஓட்டம் ஆண்டுதோறும் அனைத்து மாவட்டங்களில் நடத்தப்படும் என அறிவித்தார். அன்றாட வாழ்வில் உடற்தகுதியை பேணுவது குறித்து விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதற்கும், உடற்தகுதி கலாச்சாரத்தை இளைஞர்களிடையே புகுத்துவதற்காக மாரத்தான் போட்டிக்கு இணையான அறிஞர் அண்ணா நெடுந்தூர ஒட்டம் போட்டி காஞ்சிபுரத்தில் நாளை (27.9.2025) காலை 6 மணிக்கு அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியானது, ஆண்கள், பெண்கள் என 17 வயது முதல் 25 வயதிற்குட்பட்டவர்களுக்கு 8 கி.மீ., 5 கிமீ., 25 வயதிற்கு மேல் 10கி.மீ., 5.கிமீ., என போட்டி நடக்கவுள்ளது. எனவே, போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவ – மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ளலாம். போட்டியில் கலந்து கொள்பவர்கள் தங்களது பெயர்களை போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் ஒரு மணி நேரம் முன்பு பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அலுவலகத்திலோ அல்லது 74017 03481 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு விவரங்கள் அறியலாம்.

Tags : Kanchipuram ,Minister ,Youth Welfare and ,Sports ,Development ,Anna Marathon run ,
× RELATED மின் வாரிய அலுவலகம் முன்பு கொட்டப்படும் கட்டிட கழிவுகள்: அகற்ற கோரிக்கை