×

3 மாநில சட்டசபை தேர்தல்: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜக பொறுப்பாளர்களை நியமித்தார் ஜெ.பி. நட்டா!!

சென்னை: தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளராக பைஜயந்த் பாண்டாவை நியமித்து ஜே.பி.நட்டா அறிவிப்பு வெளியிட்டார். பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியிலும், மேற்கு வங்காளம், தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டும் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தல்களில் பா.ஜ.க. வெற்றி பெறும் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

இந்நிலையில், தமிழ்நாடு, பீகார், மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தலுக்கான பொறுப்பாளர்களை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நியமித்துள்ளார். அதன்படி, தமிழ்நாட்டில், நாடாளுமன்ற உறுப்பினர் வைஜெயந்த் பாண்டா தமிழக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஒன்றிய இணை மந்திரி முரளிதர் மொகலும் இணைப்பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பீகார் மாநில சட்டசபை தேர்தல் பொறுப்பாளராக தர்மேந்திர பிரதான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். துணை பொறுப்பாளர்களாக சி.ஆர்.பாட்டில் மற்றும் கேசவ் பிரசாத் மவுரியா நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், மேற்கு வங்காளம் சட்டசபை தேர்தல் பொறுப்பாளராக பாஜக தலைவர் பூபேந்திர யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். பிப்லாப் குமார் தேப் இணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Tags : 3 State Assembly Election ,BJP ,Tamil Nadu Legislative Election ,J. B. Nata ,Chennai ,Bajyant Panda ,Tamil Nadu ,Election Officer ,Bihar ,West Bengal ,J. K. ,
× RELATED வரலாற்றில் புதிய உச்சமாக முட்டை விலை 625...